Sunday, August 7, 2011

காந்தி கணக்கு

காத்மா காந்தி உப்பு சத்தியாகிரஹம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவு அளித்தார்களாம். நேரடியாக எங்களால் இந்த போராட்டத்தில் கலந்த கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது காந்தி கணக்கு என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம் என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.

Wednesday, April 15, 2009

இனிய புத்???!!!.....

நீங்கள் நினைப்பது புரிகிறது, என்னடா தலைவர் மட்டும் புத்தாண்டுக்கு ஒன்றும் போடமல் இருந்தார் (பதிவைச் சொன்னேன்) இப்போது அவரும் ஆரம்பித்து விட்டார்யென்று,

ன்ன செய்வது, தலைவருக்கு புத்தாண்டு அன்று விடிந்ததிலிருந்து 'குட்டி மேட்டர்' சேவையிலும் (sms), வாய்ப்பேசியிலும் (கை எப்படி பேசும், ஆனால் நமது கட்சியின் குண்டர் படையில் கையும் பேசும்) புத்தாண்டு வாழ்த்து வந்த வண்ணம் இருந்தது, எல்லோருக்கும் பதில் வாழ்த்து சொல்லிவிட்டு, வலைப்பதிவில் பார்த்தால் அங்கும் அதே. எல்லா பதிவர்களும் தமிழ் வருடத்தின் முதல் நாள் எப்படியாவது பதிவு போட்டு விட வேண்டுமென்று எல்லோரும் புத்தாண்டு வாழ்த்துயென்று ஒரு பதிவை போட்டு விட்டார்கள். அதை முடித்து தொலைக்காட்சி பார்க்க அமர்ந்தால் நமது கட்சிக்கும், குண்டர் படைக்கும் ஏற்றவாறு சில படங்களை காண்பித்தார்கள். நல்ல வேளை எந்த காக்கா, குருவி படமும் போடவில்லை. அத்துடன் முன்பெல்லாம் நமது கட்சிக்கே சவால்விடும் படி முதல் நாள் விடியற்காலை 4 மணியிலிருந்து அடுத்த நாள் 4 மணி வரை தொலைக்காட்சி பார்த்தால் பரிசாக லாரி தருவது, கப்பல் தருவது ,ஏரோப்பிளேன் தருவது இதெல்லாம் இப்போது மாறியுள்ளது. ஆனால் இப்போதும் டப்பாங்குத்து ஆட்டம் போட்டுவிட்டு, மொக்க ஜோக் சொல்லிவிட்டு, இந்த நம்பருக்கு மெஸேஜ் அனுப்பு, அந்த நம்பருக்கு மெஸேஜ் அனுப்பு என்பதும் நிற்க வேண்டும். தலைவர் நிறைய மெஸேஜ் அனுப்பி அழிந்துவிட்டார்.

நாங்கள் அரியணை ஏறினால் இது எல்லாவற்றையும் நிறுத்தி எங்களுக்கு மட்டுமே மெஸேஜ்ஜை பின்னுட்டமாக அனுப்ப வேண்டுமென்று கட்டளையிடுவோம்.

புத்தாண்டான்று வருத்தமளிக்கும் ஒரே விசயம், எந்த ஒரு பெரிய விண்கல்லின் படமோ (அதாங்க நட்சத்திரம்), எரிக்கல்லின் படமோ வெளியாகவில்லை.

நாடு உருப்பட நாலு யோசனைகள்! கிறுகிறுக்க வைக்கும் வைரமுத்து வாரிசு...

திமு.க, அதிமுக, மதிமுக மூன்று கட்சிகளும் நாட்டின் நலன் கருதி ஒன்றிணைய வேண்டும்! (கேப்டனை விட்டுட்டீங்களே பாஸ்)

அரசியலில் மூத்த தலைவர் என்பதால் கலைஞர், இந்த கூட்டணிக்கு தலைமை அரசியல் ஆலோசகராக பொறுப்பேற்க வேண்டும். ஜெயலலிதா முதல்வராகவும், துணை முதல்வராக ஸ்டாலினும் இருக்க வேண்டும். (அப்புறம் பாஸ¨?) தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ செயல்படலாம்!

கனிமொழி மாதிரி கயல்விழிக்கும் முக்கிய பதவி கொடுக்கணும். பிரியங்காவை மூன்றாவது அணிக்கு தலைமையேற்க வைக்கணும்! இப்படி வரிசையாக பொளந்து கட்டியிருக்கிறார் கபிலன்.

நன்றி-ஆர்.எஸ். அவர்கள், தமிழ் சினிமா.காம்

மேலும் படிக்க

வர் நம்மை விட பெரிய தலைவரா வருவார் போல் தெரிகிறதே...

Monday, April 13, 2009

துள்ளுவதோ இளமை

உரையை ஆரம்பிக்கும் முன்-

லங்கையில் புத்தாண்டு காரணமாக ஏப்ரல் 13 மற்றும் 14 போர் நிறுத்தம் செய்யப்படுகிறது, இப் போர் நிறுத்தம் வருங்காலத்திற்க்கும் தொடர வேண்டுமென்று கேட்டு கொள்கிறோம்…

மது அடுத்த கட்ட திட்டங்களை சொல்லும் முன் சில உண்மைகளை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

'இலங்கையில் போர் நிறுத்ததிற்கு காரணம் கலைஞர் அவர்கள்'- இது செய்தியாக வந்துள்ளது, போர் நிறுத்ததிற்கு நாங்களும் ஒரு காரணம். என்னவென்றால் அவரும் ஓன்றும் செய்யவில்லை, நாங்களும் ஓன்றும் செய்யவில்லை.

அடுத்ததாக LG கூட்டு பெருங்காய அத்வானி அவர்கள் காங்கிரஸ் கட்சியை 125 வயசாகிய ‘கிழடி’ என்றும் அதற்கு மோடி மஸ்தான் ஒத்து ஊதிக் கொண்டும் உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிய‘க்கா’ அவர்களின் வயதைக் கூறி வாதாடி கொண்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் இ.அ.23-ம் புலிகேசியில் வரும் ‘சண்டை மைதானம்’ அமைத்து சண்டை போடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் இந்த இருவருக்கும் சொல்லி கொள்வது என்னவென்றால், எங்கள் கட்சியிலிருக்கும் அனைவரும் 10 வயதுக்கு குறைந்தவர்களே, நாட்டிலேயே இளமையான கட்சி எங்களுடையதே என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

‘சமஞ்ஜ வாடி பாட்டி’ என்ற கட்சி கம்பியுட்டரை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளது, அப்படி நடக்கும் பட்சத்தில் மக்கள் அனைவருக்கும் நாங்கள் இலவசமாக ஸ்லேட்டும், பல்பமும் வழங்குவோம் என்று தெரிவிக்கிறோம்.

நமது கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கு ஹாலிவுட்லிருந்து நடிகர், நடிகைகள் வருவதால்,நம்ம சென்னை காசிமேட்டிலிருக்கும் கடற்கரைக்கு அவர்கள் கள்ள தோனியில் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை வரவேற்க செல்ல வேண்டியிருப்பதால் இத்துடன் எனது உரையை முடித்து கொள்கிறேன்.

  angel                                                      brad-pitt

Saturday, April 11, 2009

நாங்கள் வெற்றி பெற்றால்...

மது கட்சியின் புதிய சேவையாக மற்றும் வாக்குறுதியாக மக்களுக்கும், தெண்டர்களுக்கும், வீட்டிலிருக்கும் அனைவருக்கும், டாடா நேனே கார் வழங்கப்படும். இது பற்றி நமது கூட்டணியில் இருக்கும் திரு.ஜுர்கேன் க்ருகேர் யிடம் கலந்தலேசிக்கபட்டு விட்டது. மேலும் நமது பொதுக்குழுவிலும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டாடா நானே வாங்க விரும்புகிறவர்கள் முதலில் நுழைவு சீட்டு வாங்க வேண்டும், நுழைவு சீட்டை பூர்த்தி செய்து அத்துடன் ரூ.195/- மட்டும் செலுத்தினால் ஒரு 10 அல்லது 15 வருடத்தில் கார் கிடைக்கும், பதிவு செய்ய கடைசி தேதி- 2009 தேர்தலுக்கு முன். கட்சி அலுவலகம் வர முடியாதவர்கள், தலைவர் தரும் ICICI Bank அக்கவுண்டில் பணத்தைக் கட்டி விடவும் ஏன்னென்றால் ICICI தான் தலைவருக்கு கடன் கொடுத்துள்ளது. தலைவரின் கணக்கு எண். 500106654321, நீங்கள் பணத்தை கட்டியடுத்த ஒரு மணி நேரத்தில் குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் உங்கள் வீடு தேடி வரும், முதல் 10 பேருக்கு 2 ஏக்கர் பில்டிங் பரிசாக வழங்கப்படும், இடம்-சென்னை,மவுண்ட் ரோடு, LIC ஆருகில். சீக்கிரம் முந்துங்கள் தேர்தல் நேரம் நெருங்குகிறது, தலைவர் அப்பொழுதுதான் சீக்கிரம் டாட்டா காட்ட முடியும்.

நேனே கார் வேண்டுமா எங்களுக்கு ஓட்டு போடுங்கள்.

குவார்ட்டர் பிரியாணியும், கட்டிங்கும் - ஓரு விளக்கம்

உங்களாயெல்லாம் பார்த்தா பாவமா இருக்குது, குவார்ட்டர் பிரியாணி, கட்டிங்னா என்னனு தெரியாம இருக்கீங்க, நம்ம ஏரியா பக்கம் வந்திங்கனா தெரியும். என்ன செய்ரது நானே சொல்றேன்.
நம்ம ஏரியா பிரியாணிக் கடையில ஹாப் (half) பிரியாணி,குவார்ட்டர் பிரியாணி, மற்றும் குஸ்கா தான் கிடைக்கும் இது மட்டன், சிக்கன், காக்கா எல்லாத்துக்கும் பொருந்தும்.

ப்ப நம்ம டாஸ்மாக்க பத்தி, பொதுவா பலருக்கு தெரிச்சது quarter, half, full தான், ஆனால் சில கடை நிலை குடி மக்களை கேட்டிங்கனா அவங்க சொல்வங்க

750ml = 1 புல் (full)
350ml = 1 ஹாப்
180ml = 1 குவார்ட்டர்
90 ml = 1 நைன்டி (90), நைட்டி அல்ல
45 ml = 1 கட்டிங் (cutting), நம்மலாம் கட்டிங்குக்கே வூடு கட்டுவோம்.

லைவர் ஏன் இவ்வளவு கஞ்சமா இருக்காருன்னு நீங்க நினைக்கலாம், என்ன பண்ணுவது தலைவருக்கு ரேசசன் (recession) முடியவே மாட்டேன்னுது,
அதனால் கஷ்டப்படும் தலைவருக்கு உங்கள் பொன்னனே நிதியை அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

புரியாதவர்கள் முன் பதிவையும் படிக்கவும்

Friday, April 10, 2009

தலைவர் எழுந்துவிட்டார்

தலைவர் ஏழுத ஆரம்பித்து விட்டார், அதனால் தொண்டர்கள் எல்லாம் அடக்கி வாசிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறது.

இவ்வளவு நாள் தூங்கி கொண்டு இருந்து விட்டோம், இப்பொழுது தேர்தல் நேரம் இப்பொழுதும் நாம் வேலை செய்யவிட்டால் மக்களும்,பதிவு வாசகர்களும், பதிவர்களும் நம்மை மறந்துவிடுவார்கள். தேர்தல் முடியும் வரை ஏதாவது செய்வோம் அதன் பிறகு மக்களும் மறந்து விடுவர் நாமும் நம் வேலையைச் (தூங்குவது) செய்வோம்.

தலைவரே கேட்டு கொண்டு இருக்க முடியாது, நீங்களாவே வாழ்க கோஷம் போட வேண்டும்,

தலைவர் யாரையும் புண்படுத்தியோ, காயப்படுத்தியோ ஏழுத மாட்டார் அப்படி எதுவும் காயப்படுத்தியோ, புண்படுத்தியோ இருந்தால் தலைவர் பெறுப்பல்ல நீங்களவே நல்ல போலி மருத்துவரையே அல்லது மருந்து கடையில் (Medical Shop) டாஸ்மாக்கில் அல்ல மருந்து வாங்கி போட்டு கொள்ளவும்.

தலைவருக்கு தொழில்நுட்பம் பற்றியெல்லாம் தெரியாது, தலைவருக்கு தெரிச்சத மட்டும் தான் ஏழுதுவார். தலைவர், இருக்கும் எல்ல கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார் அதனால் நீங்களாகவே அவரை உங்கள் கட்சியில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேம்.

தலைவருக்கு கை வலிப்பதினால் இத்துடன் தட்டளை நிறுத்தி கொள்கிறார்.

பி.கு; தலைவருக்கு கோஷம் போடுகிறவர்களுக்கும்,கூட்டணி வைப்பவர்களுக்கும் குவார்ட்டர் பிரியாணியும், கட்டிங்கும் ஏற்பாடு செய்யப்படும்