Monday, April 13, 2009

துள்ளுவதோ இளமை

உரையை ஆரம்பிக்கும் முன்-

லங்கையில் புத்தாண்டு காரணமாக ஏப்ரல் 13 மற்றும் 14 போர் நிறுத்தம் செய்யப்படுகிறது, இப் போர் நிறுத்தம் வருங்காலத்திற்க்கும் தொடர வேண்டுமென்று கேட்டு கொள்கிறோம்…

மது அடுத்த கட்ட திட்டங்களை சொல்லும் முன் சில உண்மைகளை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

'இலங்கையில் போர் நிறுத்ததிற்கு காரணம் கலைஞர் அவர்கள்'- இது செய்தியாக வந்துள்ளது, போர் நிறுத்ததிற்கு நாங்களும் ஒரு காரணம். என்னவென்றால் அவரும் ஓன்றும் செய்யவில்லை, நாங்களும் ஓன்றும் செய்யவில்லை.

அடுத்ததாக LG கூட்டு பெருங்காய அத்வானி அவர்கள் காங்கிரஸ் கட்சியை 125 வயசாகிய ‘கிழடி’ என்றும் அதற்கு மோடி மஸ்தான் ஒத்து ஊதிக் கொண்டும் உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிய‘க்கா’ அவர்களின் வயதைக் கூறி வாதாடி கொண்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் இ.அ.23-ம் புலிகேசியில் வரும் ‘சண்டை மைதானம்’ அமைத்து சண்டை போடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் இந்த இருவருக்கும் சொல்லி கொள்வது என்னவென்றால், எங்கள் கட்சியிலிருக்கும் அனைவரும் 10 வயதுக்கு குறைந்தவர்களே, நாட்டிலேயே இளமையான கட்சி எங்களுடையதே என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

‘சமஞ்ஜ வாடி பாட்டி’ என்ற கட்சி கம்பியுட்டரை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளது, அப்படி நடக்கும் பட்சத்தில் மக்கள் அனைவருக்கும் நாங்கள் இலவசமாக ஸ்லேட்டும், பல்பமும் வழங்குவோம் என்று தெரிவிக்கிறோம்.

நமது கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கு ஹாலிவுட்லிருந்து நடிகர், நடிகைகள் வருவதால்,நம்ம சென்னை காசிமேட்டிலிருக்கும் கடற்கரைக்கு அவர்கள் கள்ள தோனியில் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை வரவேற்க செல்ல வேண்டியிருப்பதால் இத்துடன் எனது உரையை முடித்து கொள்கிறேன்.

  angel                                                      brad-pitt

4 comments:

  1. //'இலங்கையில் போர் நிறுத்ததிற்கு காரணம் கலைஞர் அவர்கள்'- இது செய்தியாக வந்துள்ளது, போர் நிறுத்ததிற்கு நாங்களும் ஒரு காரணம். என்னவென்றால் அவரும் ஓன்றும் செய்யவில்லை, நாங்களும் ஓன்றும் செய்யவில்லை.//

    பஞ்ச் அடிச்சு டிஞ்சர் வைக்கறதுல உங்கள அடிச்சிக்க வேறு எந்த தேசிய..சாரி இன்டெர்நேசனல் தலைவரும் (?) கிடையாது.

    ReplyDelete
  2. இந்த 2 படங்களும் அருமைங்கோ

    ReplyDelete
  3. இப்படி கட்சி பேரை மாத்தி போட்டீங்களே தலீவரே..

    //‘சமஞ்ஜ வாடி பாட்டி’ என்ற கட்சி கம்பியுட்டரை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளது, அப்படி நடக்கும் பட்சத்தில் மக்கள் அனைவருக்கும் நாங்கள் இலவசமாக ஸ்லேட்டும், பல்பமும் வழங்குவோம் என்று தெரிவிக்கிறோம்.

    ReplyDelete
  4. \\இலங்கையில் போர் நிறுத்ததிற்கு காரணம் கலைஞர் அவர்கள்'‍\\

    இதென்ன புத்தாண்டு சிறப்பு காமெடியா?

    ReplyDelete