Friday, April 10, 2009

தலைவர் எழுந்துவிட்டார்

தலைவர் ஏழுத ஆரம்பித்து விட்டார், அதனால் தொண்டர்கள் எல்லாம் அடக்கி வாசிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறது.

இவ்வளவு நாள் தூங்கி கொண்டு இருந்து விட்டோம், இப்பொழுது தேர்தல் நேரம் இப்பொழுதும் நாம் வேலை செய்யவிட்டால் மக்களும்,பதிவு வாசகர்களும், பதிவர்களும் நம்மை மறந்துவிடுவார்கள். தேர்தல் முடியும் வரை ஏதாவது செய்வோம் அதன் பிறகு மக்களும் மறந்து விடுவர் நாமும் நம் வேலையைச் (தூங்குவது) செய்வோம்.

தலைவரே கேட்டு கொண்டு இருக்க முடியாது, நீங்களாவே வாழ்க கோஷம் போட வேண்டும்,

தலைவர் யாரையும் புண்படுத்தியோ, காயப்படுத்தியோ ஏழுத மாட்டார் அப்படி எதுவும் காயப்படுத்தியோ, புண்படுத்தியோ இருந்தால் தலைவர் பெறுப்பல்ல நீங்களவே நல்ல போலி மருத்துவரையே அல்லது மருந்து கடையில் (Medical Shop) டாஸ்மாக்கில் அல்ல மருந்து வாங்கி போட்டு கொள்ளவும்.

தலைவருக்கு தொழில்நுட்பம் பற்றியெல்லாம் தெரியாது, தலைவருக்கு தெரிச்சத மட்டும் தான் ஏழுதுவார். தலைவர், இருக்கும் எல்ல கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார் அதனால் நீங்களாகவே அவரை உங்கள் கட்சியில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேம்.

தலைவருக்கு கை வலிப்பதினால் இத்துடன் தட்டளை நிறுத்தி கொள்கிறார்.

பி.கு; தலைவருக்கு கோஷம் போடுகிறவர்களுக்கும்,கூட்டணி வைப்பவர்களுக்கும் குவார்ட்டர் பிரியாணியும், கட்டிங்கும் ஏற்பாடு செய்யப்படும்

3 comments:

  1. உங்க பெயர் கருணாநிதி இல்லையே !!??

    ReplyDelete
  2. தலைவரே .....என்னையும் கட்சியில சேர்த்துக்கோங்க !
    ( என்ன ..ஏன்..எப்படி-ன்னுலாம் கேட்காம நம்ம கட்சி வாழ்க என்றும் மத்த கட்சி எல்லாம் ( சோத்து கட்சியை தவிர ) ஒழிக வென்றும் வெட்கமே இல்லாம கத்துவதற்கு நான் ரெடி!)

    குறிப்பு : குவாட்டரையும் கோழி பிரியாணியையும் மறந்துராதீங்க!!!

    ReplyDelete
  3. எனக்கு அதெல்லாம் பயக்க வயக்கமில்லீங்கோவ்.

    வால்பையனைக் கேட்டுப் பாருங்க தெரியும்.

    நமக்கு வெஜிடபிள் புலாவே ஜாஸ்திங்கோ.

    //தலைவருக்கு கோஷம் போடுகிறவர்களுக்கும்,கூட்டணி வைப்பவர்களுக்கும் குவார்ட்டர் பிரியாணியும், கட்டிங்கும் ஏற்பாடு செய்யப்படும்

    ReplyDelete